தர்மபுரி
கம்பைநல்லூர் அருகேஆடு திருடிய 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
|கம்பைநல்லூர் அருகே ஆடு திருடிய 2 பேரை போலீஸ் வலைவீசி தேடி வருகின்றனர்
மொரப்பூர்:
கம்பைநல்லூர் அருகே உள்ள காடையாம்பட்டி நாகப்பன் கொட்டாயை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய மனைவி சந்திரா. இவர்கள் ஆடு மற்றும் மாடுகளை வளர்த்து வருகின்றனர். சம்பவத்தன்று வீட்டின் பின்புறம் கட்டியிருந்த ஆட்டை 2 பேர் திருடி மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்றனர். இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் அந்த நபர்களை விரட்டி சென்றனர். இதனால் அந்த நபர்கள் மோட்டார் சைக்கிளையும், ஆட்டையும் விட்டுவிட்டு தப்பி ஓடி விட்டனர். இந்த சம்பவம் குறித்து சந்திரா கம்பைநல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது ஆட்டை திருடி சென்றவர்கள் கம்பைநல்லூர் அருகே உள்ள பட்டகபட்டியை சேர்ந்த பழனி மகன் ஆனந்த் (வயது25), காடையாம்பட்டி சேர்ந்த நடராஜன் மகன் சரவணன் (33( என தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.