திருவாரூர்
பரண்மேல் ஆடு வளர்ப்பு பயிற்சி
|நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் பரண்மேடு ஆடு வளர்ப்பு பயிற்சி நடந்தது.
நீடாமங்கலம்:
நீடாமங்கலத்தில் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் பரண் மேல் ஆடு வளர்ப்பு பற்றிய பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சிக்கு தஞ்சையில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மைய வளாகத்தலைவர் டாக்டர். ஜெகதீசன் தாங்கி நல்ல ஆட்டின் இனங்கள், அவற்றை தேர்வு செய்யும் முறை, இனப்பெருக்க முறைகள் குறித்து பேசினார். நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் பெரியார் ராமசாமி முன்னிலை வகித்தார். பயிற்சிக்கான ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சபாபதி பேசுகையில், ஆடு வளர்ப்பதற்கான கொட்டகை முறைகள், பசுந்தீவன உற்பத்தி முறைகள், கலப்பு தீவனம் தயாரித்தல் மற்றும் நல்ல ஆடுகளை தேர்வு செய்தல் குறித்து விளக்கி கூறினார்.நீடாமங்கலம் கால்நடை உதவி டாக்டர் பவித்ரா ஆடுகளை தாக்கும் நோய்கள் மற்றும் அவற்றை தடுக்கும் முறை குறித்து விளக்கி கூறினார்.முன்னதாக வெள்ளாடு மற்றும் செம்மறியாடு வளர்ப்பு பற்றிய கண்காட்சியை டாக்டர் ஜெகதீசன் திறந்து வைத்தார். இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.