< Back
மாநில செய்திகள்
வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி
திருவாரூர்
மாநில செய்திகள்

வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி

தினத்தந்தி
|
9 Oct 2023 12:15 AM IST

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி 12-ந்தேதி நடக்கிறது.

நீடாமங்கலம்:

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வெள்ளாடு மற்றும் செம்மறியாடு வளர்ப்பு குறித்து ஒரு நாள் கட்டண பயிற்சி வருகிற 12-ந்தேதி(வியாழக்கிழமை) நடக்கிறது. இந்த பயிற்சியின் போது குட்டிகள் பராமரிப்பு, சினை ஆடுகள் பராமரிப்பு, கிடா பராமரிப்பு, தீவன உற்பத்தி மேலாண்மை, அடர் தீவனம் பராமரிப்பு, பரண்மேல் ஆடு, வளர்ப்பு ஆடுகளை சந்தைப்படுத்துதல், வங்கி கடன் உதவிகள், அரசு உதவித் திட்டங்கள் மற்றும் அரசு மானிய கடனுதவி திட்டங்கள் பற்றி கால்நடை மருத்துவர்கள், வங்கி மேலாளர்கள் மற்றும் அனுபவமிக்க பண்ணையாளர்கள் கலந்து கொண்டு பயிற்றுவிக்க இருக்கிறார்கள். எனவே ஆடு வளர்ப்பவர்கள் மற்றும் வளர்க்க விரும்புவர்கள் பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு வேளாண்மை அறிவியல் நிலையம் நீடாமங்கலம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவர்கள் அலுவலகத்தில் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். இத்தகவலை நிலைய விஞ்ஞானி, திட்ட ஒருங்கிணைப்பாளர் பெரியார் ராமசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்