< Back
மாநில செய்திகள்
ஆடு, கோழி விலை வீழ்ச்சி
திண்டுக்கல்
மாநில செய்திகள்

ஆடு, கோழி விலை வீழ்ச்சி

தினத்தந்தி
|
22 Oct 2023 12:30 AM IST

கோபால்பட்டி வாரச்சந்தையில்

சாணார்பட்டி அருகே உள்ள கோபால்பட்டியில் வாரச்சந்தை நேற்று நடந்தது. இந்த சந்தைக்கு கோபால்பட்டி, வேம்பார்பட்டி, கணவாய்பட்டி, மணியக்காரன்பட்டி, ஜோத்தாம்பட்டி, எஸ்.கொடை, வடுகப்பட்டி, அஞ்சுகுளிப்பட்டி, அய்யாபட்டி, பாறைப்பட்டி, மந்தநாயக்கன்பட்டி, எல்லப்பட்டி ஆகிய கிராமங்களில் இருந்து ஏராளமானோர் ஆடு, கோழிகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். புரட்டாசி மாதம் முடிந்து ஐப்பசி மாதம் பிறந்துள்ள நிலையில் நேற்று விற்பனை சூடுபிடிக்கும் என்று கிராம மக்கள் நினைத்திருந்தனர். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. சந்தையில் ஆடு, கோழிகள் விற்பனை மந்தமாகவே இருந்தது. இதேபோல் விலையும் வீழ்ச்சி அடைந்தது. 10 கிலோ எடை கொண்ட ஒரு ஆடு, ரூ.6 ஆயிரத்துக்கு விற்பனையானது. விலை வீழ்ச்சி எதிரொலியாக தாங்கள் கொண்டு வந்த ஆடு, கோழிகளை விற்பனை செய்ய மனமின்றி கிராம மக்கள் தங்களது வீடுகளுக்கே கொண்டு சென்றனர்.

மேலும் செய்திகள்