< Back
மாநில செய்திகள்
திருவாரூர்
மாநில செய்திகள்
உலக வெப்பமயமாதல் விழிப்புணர்வு ஓவியப்போட்டி
|13 Feb 2023 12:15 AM IST
வள்ளலார் குருகுலம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் உலக வெப்பமயமாதல் விழிப்புணர்வு ஓவியப்போட்டி நடந்தது.
நன்னிலம்:
நன்னிலம் வள்ளலார் குருகுலம் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் ரோட்டரி கிளப் சார்பில் உலக வெப்பமயமாவதை தடுக்கும் பொது உத்திக்கான விழிப்புணர்வு ஓவியப்போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் திருவாரூர் மாவட்டத்தில் இருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் என 1200 பேர் கலந்துகொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர். போட்டியை ரோட்டரி கிளப் உதவி மாவட்ட ஆளுனர் தேர்வு லியோன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் பாரி, பள்ளி முதல்வர் பரிமளா காந்தி, ரோட்டரி ஆளுனர் ஜானி சாம்சன், செயலாளர் ஆனந்த், பொருளாளர் அப்துல்கரீம், சாசன தலைவர் சுப்பிரமணியன், ரோட்டரி முன்னாள் தலைவர்கள் பாஸ்கரன், கமலக்கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.