< Back
மாநில செய்திகள்
நைசாக பேச்சு கொடுத்து கவனத்தை திசை திருப்பி கைவரிசை: பஸ்சில் மூதாட்டியிடம் நகை-பணம் திருட்டு
சென்னை
மாநில செய்திகள்

நைசாக பேச்சு கொடுத்து கவனத்தை திசை திருப்பி கைவரிசை: பஸ்சில் மூதாட்டியிடம் நகை-பணம் திருட்டு

தினத்தந்தி
|
5 Feb 2023 11:12 AM IST

நைசாக பேச்சு கொடுத்து கவனத்தை திசை திருப்பி பஸ்சில் மூதாட்டியிடம் நகை மற்றும் பணத்தை திருடி சென்ற 2 இளம்பெண்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

சென்னை கொளத்தூர் வளர்மதி நகரை சேர்ந்தவர் சுகுணா (வயது 61). இவர் தனது உறவினர் திருமணத்திற்கு செல்வதற்காக கைப்பையில் நகையுடன் நேற்று முன்தினம் இரவு கொளத்தூர் மூகாம்பிகை பஸ் நிறுத்தத்தில் இருந்து பஸ்சில் ஏறி பயணம் செய்து உள்ளார். அப்போது உள்ளே அமர்ந்து இருந்த 2 இளம் பெண்கள் மூதாட்டி சுகுணா அருகே அமர்ந்து நைசாக பேச்சு கொடுத்துள்ளனர். பின்னர் அந்த 2 பெண்களும் அடுத்த பஸ் நிறுத்தத்தில் திடீரென இறங்கி உள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த சுகுணா தான் கொண்டு வந்த தனது கைப்பையை சரி பார்த்தபோது, அதில் இருந்த 6 பவுன் சங்கிலி, நவரத்தின கம்மல் மற்றும் ரூ.3 ஆயிரம் பணம் திருடப்பட்டது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில், திரு.வி.க.நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்