வேலூர்
சிகரெட், மது பாட்டிலுடன் பெண்கள் ஆபாச நடனம்
|கோவில் திருவிழாவில் சிகரெட், மது பாட்டிலுடன் பெண்கள் ஆபாச நடனம் நடத்தினர்.
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூரை அடுத்த தென்புதூர் கிராமத்தில் உக்கிரகாளி அம்மன் திருவிழா நடந்தது. விழாவையொட்டி கோவில் நிர்வாகம் சார்பில் கோர்ட்டு அனுமதி பெற்று இரவு ஆடல்-பாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளை காண ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வெகு தொலைவில் இருந்தும் வந்திருந்தனர்.
இரவு 7 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை இந்த நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆண்கள், பெண்கள் என சுமார் 25 பேர் நடனம் ஆடினர்.
இந்த நடன நிகழ்ச்சியில் பெண்கள் அரைகுறை ஆடைகளுடன் ஆபாசமாக நடனமாடியது மட்டுமின்றி சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது போன்றவற்றையும் செய்து காண்பித்தனர். இதனால் பொதுமக்கள் சிலர் முகம் சுழித்ததோடு, ஆபாசமாக இருப்பதாக கூறி நடன நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினர்.
இதுபோன்ற ஆபாச நடன நிகழ்ச்சிகளை நடத்த தடை விதிக்க வேண்டும் எனவும் பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
-