சென்னை
காசிமேடு மார்க்கெட்டில் ஆபாசமாக பேசிய வாலிபரை ஓட ஓட விரட்டி தாக்கிய பெண்கள் - சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்
|ஆபாசமாக பேசிய வாலிபரை ஓட ஓட விரட்டி தாக்கிய பெண்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது .
காசிமேடு,
சென்னை காசிமேடு பகுதியில் அமைந்துள்ள பழைய கடலோரம் மீன் சந்தை பகுதியில் பெண்கள் ஏராளமானோர் சிறிய வகையில் கடைகள் அமைத்து மீன் வியாபாரம் செய்து வருவார்கள். நேற்று அதிகாலையில் அங்கு இருந்த 2 பெண்களிடம் அதே பகுதியில் கருவாடு காய வைக்கும் இடத்தில் வேலை செய்து வந்த வடமாநில வாலிபர் ஒருவர், ஆபாசமாக பேசி அத்துமீறலில் ஈடுபட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டதாக தெரிகிறது.
பின்னர் விடிந்தவுடன் அதே வழியாக வந்த அந்த வாலிபரை, மடக்கி பிடித்த மீனவ பெண்கள் இருவரும் துடைப்பம், பிளாஸ்டிக் குழாய் ஆகியவற்றை கொண்டு அந்த வாலிபரை ஓட ஓட விரட்டி தர்ம அடி கொடுத்தனர். ஒரு கட்டத்தில் அடி தாங்க முடியாமல் அந்த வாலிபர், அங்கு மீன் வெட்டி கொண்டிருந்த ஒருவரது கத்தியை எடுத்து மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதனால் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதை யாரோ செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். அந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.