< Back
மாநில செய்திகள்
விளையாட்டு விடுதியில் தங்கி பயிற்சி பெற மாணவிகள் விண்ணப்பிக்கலாம்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

விளையாட்டு விடுதியில் தங்கி பயிற்சி பெற மாணவிகள் விண்ணப்பிக்கலாம்

தினத்தந்தி
|
27 Sept 2022 12:18 AM IST

காட்பாடியில் உள்ள விளையாட்டு விடுதியில் தங்கி பயிற்சிபெற மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.



காட்பாடியில் உள்ள விளையாட்டு விடுதியில் தங்கி பயிற்சிபெற மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

விளையாட்டு விடுதி

தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் கீழ் இயங்கி வரும் சிறப்பு நிலை விளையாட்டு விடுதிகளில், கல்லூரிகளில் பயிலும் மாணவிகள் விளையாட்டு துறையில் சாதனை புரிவதற்கு ஏற்ப நல்ல பயிற்சி, ஊட்டச்சத்து நிறைந்த உணவு, தங்குமிட வசதி செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடியில் புதிய விளையாட்டு அரங்கம் மற்றும் மாணவிகளுக்கான சிறப்பு நிலை விளையாட்டு விடுதி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த விளையாட்டு விடுதியில் கூடைப்பந்து, வளைகோல் பந்து, கைப்பந்து மற்றும் கபடி ஆகிய பிரிவுகளில் 2022-23-ம் ஆண்டிற்கு தங்கி பயிற்சி பெற தேர்வு நடைபெற்றது. இந்த விளையாட்டு விடுதியில் தங்கி பயிற்சி பெற காலியிடங்கள் உள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவிகள் இந்த சிறப்பு விளையாட்டு விடுதியில் தங்கி பயிற்சி பெற ஊக்கமளிக்கும் வகையில் 2-ம் கட்ட தேர்வு நடைபெற உள்ளது.

மாணவிகள் விண்ணப்பிக்கலாம்

எனவே வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள சிறப்பு விளையாட்டு விடுதியில் தங்கி பயிற்சி பெற விருப்பமுள்ள மாணவிகள் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வருகிற 7-ந் தேதி வரை ஆன்லைன் மூலம் தகுதி சான்றிதழினை பதிவேற்றம் செய்து விண்ணப்பத்தினை பூர்த்தி செய்ய வேண்டும். சிறப்பு விளையாட்டு விடுதியில் தங்கி பயிற்சி பெற மாணவிகளுக்கான மாநில அளவிலான தேர்வு வருகிற 10-ந் தேதி காலை 8 மணி அளவில் காட்பாடி விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.

இந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்