< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
இளைஞர் மீது இளம்பெண் ஆசிட் வீச்சு - ஈரோட்டில் பரபரப்பு
|11 March 2023 9:31 PM IST
இளைஞர் மீது ஆசிட் வீசிய இளம்பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் பவானியில் கார்த்திக் என்ற இளைஞர் மீது இளம்பெண் ஒருவர் ஆசிட் வீசியுள்ளார். இதில் அந்த இளைஞர் படுகாயமடைந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் இளைஞர் மீது ஆசிட் வீசிய இளம்பெண்ணை கைது செய்த போலீசார், எதற்காக அந்த நபர் மீது ஆசிட் வீசினார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஈரோடு பவானி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.