திருவாரூர்
9-ம் வகுப்பு மாணவி கடத்தல்
|மன்னார்குடியில் திருமண ஆசை வார்த்தை கூறி 9-ம் வகுப்பு மாணவியை கடத்தி சென்ற தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
மன்னார்குடி;
மன்னார்குடியில் திருமண ஆசை வார்த்தை கூறி 9-ம் வகுப்பு மாணவியை கடத்தி சென்ற தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
மாணவி மாயம்
மன்னார்குடி அருகே உள்ள ஏத்தக்குடி பகுதியை சேர்ந்தவர் சிவா(வயது22). இவர் கம்பி பிட்டராக வேலை செய்து வருகிறார். இவர் ஒரு கிராமத்துக்கு கட்டிட வேலை செய்ய சென்றபோது அதே பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவியுடன் பழகி வந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் கடந்த 14-ந் தேதி முதல் மாணவியை காணவில்லை. இது குறித்து மாணவியின் தந்தை மன்னார்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
கைது
இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவியை சிவா திருமண ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே தங்கி இருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து பேலீசாா் திருப்பூருக்கு சென்று மாணவி மற்றும் சிவாவை மன்னார்குடிக்கு அழைத்து வந்தனர். பின்னர் மாணவியை அவரது பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர். மேலும் சிவாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.