< Back
மாநில செய்திகள்
இளம்பெண் கழுத்தை நெரித்து கொலை: நெருங்கிய குடும்ப நண்பர் கைது
மாநில செய்திகள்

இளம்பெண் கழுத்தை நெரித்து கொலை: நெருங்கிய குடும்ப நண்பர் கைது

தினத்தந்தி
|
13 Jan 2024 5:48 AM IST

ஓசூர் அருகே இளம்பெண் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது குடும்ப நண்பரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள சாய் சக்தி நகரை சேர்ந்தவர் நீலம். திருமணமாகி 2 குழந்தைகளுடன் வசித்து வந்த இவர், கடந்த 4-ம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது, கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில், சடலமாக கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொலையின் பின்னணி குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார், ரஜினிஷ்குமார் என்ற இளைஞரை கைது செய்தனர்.

விசாரணையில், நீலத்தின் சகோதரரும், அவருடைய கணவரும் பெயிண்ட் கடை ஒன்று நடத்தி வந்தனர். அந்த கடையில் பணிபுரிந்து வந்த ரஜினிஷ்குமார், கடந்த ஒன்றரை வருடங்களாக நீலத்தின் குடும்பத்துடன் நெருங்கி பழகி வந்துள்ளார்.

சம்பவத்தன்று, நீலத்தின் கணவர் அதிகளவிலான பணத்தை வீட்டிற்கு எடுத்து செல்வதை அறிந்த ரஜினிஷ் குமார், பணத்தை கொள்ளையடிக்கும் பொருட்டு வீட்டிற்குள் புகுந்த நிலையில், தனியே இருந்த நீலத்தை துண்டால் கழுத்தை நெரித்து கொன்றது தெரியவந்தது. ரஜினிஷ்குமாரை போலீசார் சிறையிலடைத்த நிலையில், இதன் பின்னணி குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்