< Back
மாநில செய்திகள்
கடலூர் அருகே சிறுமி பாலியல் பலாத்காரம்தொழிலாளி கைது
கடலூர்
மாநில செய்திகள்

கடலூர் அருகே சிறுமி பாலியல் பலாத்காரம்தொழிலாளி கைது

தினத்தந்தி
|
29 Jan 2023 12:15 AM IST

கடலூர் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி கைது செய்யப்பட்டாா்.

கடலூர் அருகே உள்ள நடுத்திட்டு பகுதியை சேர்ந்தவர் மாயவன் மகன் பாரதி (வயது 28), கூலி தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி பள்ளிக்கு செல்லும் போதும், பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும்போதும் பின் தொடர்ந்து சென்று தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தி வந்துள்ளார். மேலும் தன்னை காதலிக்கவில்லை எனில் இறந்து விடுவதாகவும் அந்த சிறுமிக்கு மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுபற்றி அறிந்த சிறுமியின் தாய், புதுச்சேரி மாநிலம் புதுக்கடையில் உள்ள தனது அக்காள் வீட்டில் சிறுமியை தங்க வைத்திருந்தார். பண்டிகை காலங்களில் மட்டும் அந்த சிறுமி சொந்த ஊருக்கு வந்து சென்றுள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று சொந்த ஊருக்கு வந்திருந்த சிறுமியை திடீரென காணவில்லை. இதனால் பதறிய பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர்.

அப்போது பாரதியின் வீட்டுக்கு சென்ற போது அங்கு அவர் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், பாரதியை தட்டிக் கேட்டுள்ளனர். மேலும் இது பற்றி கடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாரதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்