< Back
மாநில செய்திகள்
சிறுமி பாலியல் பலாத்காரம்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

சிறுமி பாலியல் பலாத்காரம்

தினத்தந்தி
|
9 Nov 2022 2:57 AM IST

பந்தநல்லூர் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திருவிடைமருதூர்;

கும்பகோணம் அருகே உள்ள பந்தநல்லூர் காகிதப்பட்டறை கீழ அம்பலக்கார தெருவை சேர்ந்தவர் சங்கர். இவருைடய மகன் மணி(வயது 30). இவர் மதுபோதையில் அதே பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியிடம் திருமண ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறி்த்து சிறுமியின் தாய் பந்தநல்லூர் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்