< Back
மாநில செய்திகள்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்
சிறுமி பாலியல் பலாத்காரம்
|19 Oct 2022 1:22 AM IST
சுவாமிமலை அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக போக்சோ சட்டத்தில் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
கபிஸ்தலம்;
சுவாமிமலை அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக போக்சோ சட்டத்தில் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
காதல்
சுவாமிமலை பகுதியை சோ்ந்தவர் காசிநாதன். இவருடைய மகன் கவியரசன் (வயது22). டிரைவரான இவர் 17 வயது சிறுமியை காதலித்து ஆசை வார்த்தைகள் கூறி அந்த பெண்ணை ஊரை விட்டு அழைத்து சென்று விட்டார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் சுவாமிமலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
கைது
இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கவியரசனை தேடி வந்தனர். இந்தநிலையில் கவியரசனை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர் மீது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கவியரசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.