< Back
மாநில செய்திகள்
சிறுமி கர்ப்பம்; போக்சோவில் 2 பேர் கைது
கரூர்
மாநில செய்திகள்

சிறுமி கர்ப்பம்; போக்சோவில் 2 பேர் கைது

தினத்தந்தி
|
7 Oct 2022 12:43 AM IST

சிறுமி கர்ப்பம்; போக்சோவில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர் மாவட்டம் மணவாசியை சேர்ந்தவர் மல்லீஸ்வரன் (வயது 25), அதே ஊரை சேர்ந்தவர் இளவரசன் (24). இவர்கள் 2 பேரும் 17 வயது சிறுமி ஒருவருடன் நெருங்கி பழகி வந்துள்ளார். இதில் அந்த சிறுமி 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். இது தொடர்பாக சிறுமி அளித்த புகாரின் பேரில் மல்லீஸ்வரன் மற்றும் இளவரசன் ஆகிய 2 பேர் மீது குளித்தலை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ உள்ளிட்ட வழக்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து அவர்களை கைது செய்தனர். மல்லீஸ்வரன் மற்றும் இளவரசன் ஆகிய 2 பேரும் இரு வேறு கொலை வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்