< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ஐஐடி வளாகத்தில் உள்ள காட்டுப்பகுதியில் பெண் தோழி, போதை ஊசியோடு சிக்கிய இளைஞர்
|29 March 2024 10:47 PM IST
ஐஐடி வளாகத்தில் உள்ள காட்டுப்பகுதியில் போதை ஊசிகளோடு, பெண் தோழியுடன் இருந்த இளைஞரை மடக்கி பிடித்த காவலாளி, காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.
சென்னை,
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள ஐஐடி வளாகத்தில் உள்ள காட்டுப்பகுதியில் பெண் தோழியுடன் சிக்கிய இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. ஐஐடி வளாக காட்டுப்பகுதியில் போதை ஊசிகளோடு பெண் தோழியுடன் இருந்த இளைஞரை மடக்கி பிடித்த காவலாளி, காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.
தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் விசாரணை நடத்தியதில், அவர்கள் இருவரும் ஐஐடி வாளகத்தில் உள்ள பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் என்பதும், பள்ளி விழாவில் பங்கேற்க வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து இருவரின் பெற்றோரையும் அழைத்த போலீசார், எழுதி வாங்கிக்கொண்டு எச்சரித்து அனுப்பி வைத்தனர்.