< Back
மாநில செய்திகள்
பெண் மர்ம சாவு
அரியலூர்
மாநில செய்திகள்

பெண் மர்ம சாவு

தினத்தந்தி
|
13 Aug 2022 1:13 AM IST

பெண் மர்மமான முறையில் இறந்தார்.

செந்துறை:

தூக்கில் தொங்கினார்

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சிறுகடம்பூர் கிராமத்தை சேர்ந்த பழனிவேலின் மகள் கவிதா(வயது 28). இவருக்கும், இலைக்கடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த இளையராஜா என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமண நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று வீட்டில் மர்மமான முறையில் கவிதா தூக்கில் தொங்கினார். இது குறித்து தகவல் அறிந்த செந்துறை போலீசார் விரைந்து சென்று கவிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கவிதாவின் உடலில் காயங்கள் இருந்ததாக உறவினர்கள் கூறியுள்ளனர். இதனால் இவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் பிரச்சினை உள்ளதா? என்பது குறித்து செந்துறை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்