< Back
மாநில செய்திகள்
மணலி புதுநகர் அருகே வாகனம் மோதி சிறுமி சாவு
சென்னை
மாநில செய்திகள்

மணலி புதுநகர் அருகே வாகனம் மோதி சிறுமி சாவு

தினத்தந்தி
|
26 May 2022 10:49 AM IST

மணலி புதுநகர் அருகே வாகனம் மோதி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

மணலி புதுநகரை அடுத்த கவுண்டர்பாளையம் திருநிலை கிராமத்தை சேர்ந்தவர் செல்லப்பா . பூம் பூம் மாட்டுக்காரரான இவருடைய மகள் சத்யா (வயது 8). அதே பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தாள். சம்பவத்தன்று சிறுமி சத்யா , வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தாள்.

அப்போது பின்புறமாக வந்த வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த சத்யாவை சிகிச்சைக்காக பாடியநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், சத்யா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இது குறித்து மணலி புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கொடிராஜ் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்