திருச்சி
கல்லூரி வளாகத்தில் கார் மோதி பெண் சாவு
|கல்லூரி வளாகத்தில் கார் மோதி பெண் உயிரிழந்தார்.
மணிகண்டம்:
திருச்சி பீமநகர் கூனிபஜாரை சேர்ந்த ஆரோக்கியத்தின் மனைவி ரூபி(வயது 38). இவர் திருச்சி-மதுரை சாலையில் உள்ள ஒரு கல்லூரியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் ரூபி நேற்று முன்தினம் மாலை கல்லூரியில் வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக கல்லூரி வளாகத்தில் நடந்து சென்றார். அப்போது கல்லூரிக்கு அச்சிடப்பட்ட நோட்டு புத்தகங்களை காரில் கொண்டு வந்து இறக்கிவிட்டு, மீண்டும் வெளியே செல்வதற்காக அந்த காரை திருச்சி காந்தி மார்க்கெட்டை சேர்ந்த சீனிவாசன்(42) ஓட்டிச் சென்றார். அப்போது நடந்து சென்ற ரூபி மீது பின்னால் வந்த கார் மோதியது. இதில் பலத்த காயமடைந்த ரூபியை அங்கிருந்தவர்கள் மீட்டு கல்லூரி வாகனத்தின் மூலம் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து மணிகண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.