< Back
மாநில செய்திகள்
வாந்தி, பேதியால் சிறுமி பலி
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்

வாந்தி, பேதியால் சிறுமி பலி

தினத்தந்தி
|
26 March 2023 10:19 PM IST

நெமிலி அருகே வாந்தி, பேதியால் சிறுமி பலியானாள்.

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மாரிச்சாமி (வயது 50). ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கம்பெனியில் கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பரமேஸ்வரி. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உண்டு. அதில் இரண்டாவது மகள் மகள் நிகிதா லட்சுமி (வயது 7) அங்குள்ள அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்தநிலையில் நிகிதா லட்சுமிக்கு வாந்தி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து திடீரென வயிற்றுப்போக்கும் ஏற்பட்டுள்ளது. மேலும் காய்ச்சலும் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனைதொடர்ந்து பரமேஸ்வர மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக நிகிதாலட்சுமியை கொண்டு சென்றனர். பின்னர் ஆட்டுப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும், அங்கிருந்து அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், நிகிதா லட்சுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து நெமிலி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்