சேலம்
பொன்னம்மாபேட்டையில் தூக்குப்போட்டு சிறுமி தற்கொலை போலீசார் விசாரணை
|சேலம் பொன்னம்மாபேட்டையில் தூக்குப்போட்டு சிறுமி தற்கொலை செய்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம்,
16 வயது சிறுமி
சேலம் பொன்னம்மாபேட்டை புத்துமாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருக்கு 2 மனைவிகள். இரும்பாலை பகுதியில் முதல் மனைவியுடன் கிருஷ்ணன் வசித்து வருகிறார். அவரது 2-வது மனைவி சாந்தி ஏற்கனவே இறந்துவிட்டார். சாந்திக்கும், கிருஷ்ணனுக்கும் 4 மகள்கள் உள்ளன. இதில், 3 பேருக்கு திருமணம் ஆகிவிட்டது. இளைய மகளான ஜோதிகா (வயது 16) என்பவர் கடந்த ஒரு வருடமாக தனது அக்காள் சசிகலா வீட்டில் வசித்து வந்துள்ளார்.
கர்ப்பிணியாக இருந்த சசிகலா பிரசவத்திற்காக தனது மூத்த அக்காள் வீட்டிற்கு சென்றுவிட்டார். சிறுமி ஜோதிகா சேலத்தில் உள்ள ஒரு ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று காலை சசிகலாவின் கணவர் வீட்டிற்கு சாப்பாடு கொண்டு வந்தார்.
தற்கொலை
அப்போது, நீண்ட நேரம் ஆகியும் ஜோதிகா வீட்டின் கதவை திறக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது, அங்கு ஜோதிகா தூக்குப்போட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அம்மாப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். குடும்ப பிரச்சினையில் சிறுமி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.