தர்மபுரி
இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
|பாப்பிரெட்டிப்பட்டி அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தினார்.
பாப்பிரெட்டிப்பட்டி:-
பாப்பிரெட்டிப்பட்டி அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தினார்.
புதுப்பெண்
பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா பொம்மிடி அருகே பண்டாரசெட்டிப்பட்டியை சேர்ந்த லாரி டிரைவர் அருண்குமார். இவர், பெங்களூருவில் வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கும், திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த பாலு மகள் அர்ச்சனா (வயது 27) என்பவருக்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அர்ச்சனா கடந்த 3 மாதங்களாக திருப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
தூக்குப்போட்டு தற்கொலை
கடந்த சில நாட்களுக்கு முன்பு அருண்குமாரின் உறவினர் ஒருவர் இறந்து விட்டார். அதற்காக அருண்குமாரும், அர்ச்சனாவும் சொந்த ஊருக்கு வந்து இருந்தனர். இதற்கிடையே நேற்று முன்தினம் அருண்குமார் வீட்டில் அர்ச்சனா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அர்ச்சனா தற்கொலைக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.
இதுகுறித்து அர்ச்சனாவின் தாயார் பொம்மிடி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருமணம் ஆகி 1½ ஆண்டுகள் ஆவதால் அரூர் உதவி கலெக்டர் விஸ்வநாதன் விசாரணை நடத்தினார்.