< Back
மாநில செய்திகள்
இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
சேலம்
மாநில செய்திகள்

இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
5 Aug 2022 12:46 AM IST

தலைவாசல் அருகே திருமணமான 3 ஆண்டுகளில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

தலைவாசல்:-

தலைவாசல் அருகே திருமணமான 3 ஆண்டுகளில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

இளம்பெண்

தலைவாசல் அருகே சிறுவாச்சூர் ஊராட்சி திருவள்ளுவர் நகர் பொன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அருள்ஜோதி. நெல் அறுவடை எந்திர டிரைவர். இவருடைய மனைவி உத்ரா (வயது 24). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகிறது.

இந்த நிலையில் உத்ரா நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாதபோது மின்விசிறியில் தூக்குப்போட்டு கொண்டார். வெளியே சென்று இருந்த கணவர் அருள்ஜோதி வீட்டுக்கு வந்தபோது மனைவி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் மனைவியை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

உதவி கலெக்டர் விசாரணை

அங்கு உத்ராவை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். தகவல் அறிந்த தலைவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்தார்.

இதுகுறித்து பெண்ணின் தந்தை பழனிமுத்து தனது மகள் சாவில் சந்தேகம் உள்ளதாக தலைவாசல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 3 ஆண்டில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால் இதுகுறித்து ஆத்தூர் உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்