< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை
|1 Aug 2022 10:21 PM IST
நிலக்கோட்டை அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நிலக்கோட்டை அருகே உள்ள கொங்குபட்டியை சேர்ந்தவர் செல்லமணி. இவருடைய மகள் வீரசின்னம்மாள் (வயது 24). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவர், உறவினரான கார்த்திக் என்பவரை திருமணம் செய்துகொண்டு அதே பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் வீரசின்னம்மாளுக்கு கர்ப்பப்பை பிரச்சினை காரணமாக அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டு வந்தது.
பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இதனால் மனஉளைச்சலில் இருந்த வீரசின்னம்மாள், வீட்டில் யாரும் இல்லாத போது சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விளாம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.