< Back
மாநில செய்திகள்
இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
20 July 2023 12:24 AM IST

இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுக்கோட்டையை சேர்ந்த மருதுபாண்டியின் மனைவி வேணி (வயது 30). இவரது கணவர் தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்தி வருகிறார். இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி 3 ஆண்டுகள் ஆன நிலையில் 1 ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு காரணமாக வேணி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இது தொடர்பாக டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமான 3 ஆண்டுகளில் அவர் தற்கொலை செய்த நிலையில் புதுக்கோட்டை ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்