< Back
மாநில செய்திகள்
பெண் குழந்தைகள் தின கருத்தரங்கு
நீலகிரி
மாநில செய்திகள்

பெண் குழந்தைகள் தின கருத்தரங்கு

தினத்தந்தி
|
12 Oct 2023 1:30 AM IST

கோத்தகிரியில் பெண் குழந்தைகள் தின கருத்தரங்கு நடைபெற்றது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் உலக பெண் குழந்தைகள் தினத்தையொட்டி கோத்தகிரி அரசு உதவி பெறும் பள்ளியில் சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது. இதற்கு தலைமை ஆசிரியை தலைமை தாங்கினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க நீலகிரி மாவட்ட தலைவர் கே.ஜே.இராஜூ கலந்து கொண்டு பேசுகையில், பெண் குழந்தைகளையும் ஆண் குழந்தைகளை போலவே நன்றாக படிக்க வைக்க வேண்டும். அவர்களது வாழ்க்கையை தேர்ந்தெடுக்கும் உரிமையை வழங்க வேண்டும். பெண் குழந்தைகள் தங்கள் உரிமைகளுக்கு தாங்களே போராட முன்வர வேண்டும் என்றார். முன்னதாக ஆசிரியை சாரதா வரவேற்றார். முடிவில் ஆசிரியை ராணி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்