< Back
மாநில செய்திகள்
இஞ்சி ஒரு கிலோ ரூ.280-க்கு விற்பனை
வேலூர்
மாநில செய்திகள்

இஞ்சி ஒரு கிலோ ரூ.280-க்கு விற்பனை

தினத்தந்தி
|
5 July 2023 12:22 AM IST

வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் இஞ்சி ஒரு கிலோ ரூ.280-க்கு விற்பனை செய்யப்பட்டது.

வேலூர் நேதாஜி மார்க்கெட்டிற்கு ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லாரிகளில் கத்தரிக்காய், தக்காளி, உருளைக்கிழங்கு, இஞ்சி உள்ளிட்ட காய்கறிகள் கொண்டு வரப்பட்டு மொத்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தநிலையில் தற்போது மார்க்கெட்டிற்கு வரும் காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. இதனால் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.

இதுகுறித்து காய்கறிகள் மார்கெட் காய்கறி வணிகர் சங்க தலைவர் வாசு கூறுகையில், தக்காளி தொடர்ந்து ஒரு கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் ஒரு கிலோ ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்ட இஞ்சி விலை அதிகரித்து நேற்று ரூ.280 முதல் ரூ.300 வரை விற்பனை செய்யப்பட்டது.

மற்ற காய்கறிகள் (விலை ஒரு கிலோ) வருமாறு:-

பூண்டு ரூ.140 முதல் ரூ.150 வரையும், பச்சைப்பட்டாணி ரூ.200-க்கும், முள்ளு கத்தரிக்காய் ரூ.80 முதல் ரூ.100 வரையும், பீன்ஸ் ரூ.80 முதல் ரூ.90 வரையும், சின்ன வெங்காயம் ரூ.80 முதல் ரூ.100 வரையும் விற்பனை செய்யப்பட்டது என்றனர்.

விலை உயர்வால் காய்கறிகள் வாங்க வந்த பொதுமக்கள் குறைந்த அளவே காய்கறிகள் வாங்கி சென்றனர்.

மேலும் செய்திகள்