< Back
மாநில செய்திகள்
மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள்
திருப்பத்தூர்
மாநில செய்திகள்

மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள்

தினத்தந்தி
|
16 July 2022 12:06 AM IST

குனிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் - முதன்மை கல்வி அலுவலர் வழங்கினார்

தமிழக அரசு காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட உத்தரவிட்டுள்ளது.

இதனையொட்டி கந்திலி ஒன்றியம் குனிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு கட்டுரை, ஓவியம், பேச்சு, கவிதை போட்டிகள் நடைபெற்றது.

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளியில் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் எஸ்.குழந்தைசாமி, தலைமை தாங்கினார்.

முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசினார்

நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் பிருத்தி, ராஜலட்சுமி, பாண்டியன், சக்திவேல் உள்பட பலர் பேசினார்கள். இதில் மாணவர்கள், பெற்றோர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

முடிவில் உதவி தலைமை ஆசிரியர் தாயுமானவன் நன்றி கூறினார்.

Related Tags :
மேலும் செய்திகள்