< Back
மாநில செய்திகள்
மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள்
தேனி
மாநில செய்திகள்

மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள்

தினத்தந்தி
|
13 July 2022 11:06 PM IST

தூய்மை மக்கள் இயக்கம் குறித்து விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் முரளிதரன் பரிசுகளை வழங்கினார்.

தேனி அல்லிநகரம் நகராட்சியில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை போட்டி, ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி ஆகிய போட்டிகள் நடந்தன. இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. விழாவில் மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். விழாவில் பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணக்குமார், நகர்மன்ற தலைவர் ரேணுப்பிரியா, துணைத்தலைவர் செல்வம், ஆணையாளர் வீரமுத்துக்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்