< Back
மாநில செய்திகள்
மாணவ, மாணவிகளுக்கு பரிசு
தென்காசி
மாநில செய்திகள்

மாணவ, மாணவிகளுக்கு பரிசு

தினத்தந்தி
|
15 Jun 2022 6:32 PM IST

மடத்தூரில் மாணவ, மாணவிகளுக்கு பரிசு

பாவூர்சத்திரம்:

கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கருணாநிதி 99-வது பிறந்த தின விழா, தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் மடத்தூரில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் சீனித்துரை தலைமை தாங்கினார். ராமர், பூமணி, ஜெயராஜ், மணிகண்டன், அண்ணாத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பேச்சாளர் தூத்துக்குடி சரத்பாலா பேசினார். மாவட்ட பொறுப்பாளர் பொ.சிவபத்மநாதன் கலந்து கொண்டு, நலிவுற்றோருக்கு நலத்திட்ட உதவிகள், கல்வியில் சிறந்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசினார். இதில் கீழப்பாவூர் யூனியன் தலைவி சீ.காவேரி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சாக்ரடீஸ், அட்மா தலைவர் காந்திராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்