< Back
மாநில செய்திகள்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்
நாடக மன்ற உறுப்பினர்களுக்கு பரிசுப்பொருட்கள்
|20 Oct 2022 12:15 AM IST
நாடக மன்ற உறுப்பினர்களுக்கு பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன.
ஆரணி
நாடக மன்ற உறுப்பினர்களுக்கு பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பாக திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை பகுதியில் உள்ள நாடக நடிகர் சங்க கலைஞர்களுக்கு வேட்டி, சேலை, இனிப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஆரணியில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் வாசுதேவன் தலைமையில் ஆரணியில் ஸ்ரீ அரியாத்தம்மன் கோவில் முன்பு உள்ள நாடக மன்றத்தில் நாடக கலைஞர்கள் அண்ணாமலை, பாலகிருஷ்ணன், குமணன், சிவா அம்மு, பொன்னம்பலம் மற்றும் நாடகக் கலைஞர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 50 உறுப்பினர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக விழாவில் தெரிவிக்கப்பட்டது.