சிவகங்கை
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள்
|போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில், கல்லூரி மாணவர்களுக்கிடையே விழிப்புணார்வை ஏற்படுத்திடும் வகையில் ஆண்டுதோறும் மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு, மாணவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கி ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, மாவட்ட அளவில் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் சிவகங்கையில் நடத்தப்பட்டன. அப்போட்டிகளில் சுமார் 20 கல்லூரிகளிலிருந்து 70-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கு பெற்றனர். கவிதை, கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகள் தனித்தனியாக நடத்தபட்டது. இதில் முதல் மூன்று இடத்தை பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசுத்தொகையாக தலா ரூ.10,000, 2-ம் பரிசுத்தொகையாக ரூ.7,000, 3-ம் பரிசுத்தொகையாக ரூ.5,000 மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், சிவகங்கை மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் நாகராசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.