< Back
மாநில செய்திகள்
பள்ளி ஆண்டு விழாவில் மாணவர்களுக்கு பரிசு
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

பள்ளி ஆண்டு விழாவில் மாணவர்களுக்கு பரிசு

தினத்தந்தி
|
2 March 2023 12:15 AM IST

பள்ளி ஆண்டு விழாவில் மாணவர்களுக்கு பரிசு

பரமக்குடி

பரமக்குடி யாதவா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 27-வது ஆண்டு விழா நடந்தது. விழாவிற்கு பள்ளி தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. மலேசியா பாண்டியன் தலைமை தாங்கினார். வேலு மனோகரன் முன்னிலை வகித்தார். பள்ளியின் தாளாளர் அழகர்சாமி வரவேற்றார். பள்ளியின் முதல்வர் வீரலெட்சுமி ஆண்டறிக்கை வாசித்தார். மாவட்ட கல்வி அலுவலர் பாலாஜி பேசினார். வேலு மனோகரன் பள்ளிக்கு புதிதாக மேம்படுத்தப்பட்ட விளையாட்டு திடல் அமைத்து தருவதாகவும், பள்ளியின் தலைவர் மலேசியா பாண்டியன் தொடு திரை கணினி வகுப்பறையை அறிமுகம் செய்து பயன்பாட்டிற்கு கொண்டுவர ஆவண செய்வதாகவும் தெரிவித்தனர். அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பாண்டியன் சரஸ்வதி யாதவ் கல்வி குழுமங்களின் இயக்குனர் வரதராஜன் பரிசு வழங்கி பேசினார். இதில் சண்முகம், வக்கீல் சண்முகராஜ், ஓய்வு பெற்ற காவல்துறை சண்முகம், பள்ளியின் துணைத்தலைவர்கள் முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் ஓ.பாஸ்கரன், தென்னவனூர் சந்திரன், துணைச்செயலாளர் செல்லக்காரி, இணைச்செயலாளர் சம்பத், கவுரவ தலைவர் கதிரேசன், ஆலோசகர் சங்கரராஜ் பேசினர். இந்த நிகழ்ச்சியில் செயற்குழு உறுப்பினர்கள் வெள்ளைச்சாமி, ஆசிரியர் போஸ், குபேரன் முருகேசன், சந்திரசேகரன், துரைப்பாண்டி, கார்மேகம், முத்துச்சாமி, சேகர், ஹரி கிருஷ்ணன் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சங்க பொருளாளர் கண்ணன் நன்றி கூறினார்.

Related Tags :
மேலும் செய்திகள்