< Back
மாநில செய்திகள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்
பள்ளி ஆண்டு விழாவில் மாணவர்களுக்கு பரிசு
|28 Feb 2023 12:15 AM IST
பள்ளி ஆண்டு விழாவில் மாணவர்களுக்கு பரிசு
சாயல்குடி
சாயல்குடி தொன்போஸ்கோ ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் சி.பி.எஸ்.இ. பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. பள்ளி தாளாளர் ஆரோக்கியம் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் ஆல்பர்ட் முன்னிலை வகித்தார். விழாவில் மழலையர் வகுப்பிற்கான பட்டமளிப்பு விழா, பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. சிலம்பம், யோகா, கராத்தே போன்ற போட்டிகளில் வென்றவர்களுக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் ராஜ் மரியசூசை, தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி முதல்வர் லூசியா ரோஸ் ஆகியோர் பரிசு வழங்கினர். இதில் நிர்வாகிகள் சார்லஸ் மற்றும் பிரபு ஆகியோர் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தனர். இந்நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.