< Back
மாநில செய்திகள்
மாணவர்களுக்கு பரிசு
தென்காசி
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு பரிசு

தினத்தந்தி
|
26 Jun 2023 12:54 AM IST

சிவகிரியில் யோகா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன

சிவகிரி:

தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் குழு ஆணையின்படி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் நீதிபதி சீனிவாசன் அறிவுறுத்தலின் பேரில், சிவகிரி வட்ட சட்டப்பணிகள் குழு தலைவர் நீதிபதி ஜெய காளீஸ்வரி ஆலோசனையின்படி, சிவகிரி சேனைத்தலைவர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிவகிரி சேனைத்தலைவர் மகாஜன சங்க தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். பள்ளி செயலர் தங்கேஸ்வரன், துணைத்தலைவர் மூக்கையா, பொருளாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக வக்கீல்கள் சண்முகசுந்தரம், செந்தில்குமார், சின்னத்தம்பி, துரைப்பாண்டி, சட்டம் சார்ந்த தன்னார்வலர் ராஜ், குமாஸ்தா பழனிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். தலைமை ஆசிரியர் சக்திவேலு வரவேற்று பேசினார்.

இதில் பல்வேறு யோகா போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் ஆசிரிய-ஆசிரியைகள், அலுவலர்கள், கல்விக்குழு, அறப்பணிக்குழு உறுப்பினர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். தமிழாசிரியை சுப்புலட்சுமி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

மேலும் செய்திகள்