< Back
மாநில செய்திகள்
மாணவர்களுக்கு பரிசு
தென்காசி
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு பரிசு

தினத்தந்தி
|
23 March 2023 12:15 AM IST

அரசு நூலகத்தில் மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

செங்கோட்டை:

செங்கோட்டை அரசு நூலகத்தில் சங்கரன்கோவிலை சேர்ந்த எழுத்தாளர் இளங்கோ கண்ணன் எழுதிய "தவசு" என்ற நூல் திறனாய்வு செய்யப்பட்டது. மேலும் எழுத்தாளர் ராயகிரி சங்கர்சுந்தரம்ராமசாமி எழுதிய "ஒரு புளிய மரத்தின் கதை" என்ற நாவல் ஒரு வாசகர் பார்வை என்ற தலைப்பில் பேசினார். அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சுசீலா சிறந்த திறனாய்வை தேர்வு செய்தார். தொடர்ந்து நடந்த நிகழ்ச்சிக்கு வாசகர் வட்ட தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். வாசகர் வட்ட துணைத்தலைவர் ஆதிமூலம், பொருளாளர் தண்டமிழ் தாசன் சுதாகர், விழுதுகள் சேகர், இளங்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். பட்டிமன்ற பேச்சாளர் சங்கர் ராமன், குற்றாலம் ரோட்டரி கிளப் தலைவர் திருவிலஞ்சி குமரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு விருந்தினராக முன்னாள் தென்காசி மாவட்ட கல்வி அதிகாரி சுடலை கலந்து கொண்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். நூல் ஆசிரியர் இளங்கோ கண்ணன் ஏற்புறையாற்றினார். முடிவில், நூலகர் ராமசாமி நன்றி கூறினார். இதில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்