< Back
மாநில செய்திகள்
மாணவ-மாணவிகளுக்கு பரிசு
சிவகங்கை
மாநில செய்திகள்

மாணவ-மாணவிகளுக்கு பரிசு

தினத்தந்தி
|
24 May 2023 12:15 AM IST

மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே உள்ள நெற்குப்பை நூலகத்தில் ஆர்.எம்.டி.சம்மந்தம் 89-வது பிறந்தநாள் விழா கருத்தரங்கம், அறிஞர் சோமலெவின் தமிழ் இதழ்கள் என்ற நூலின் திறனாய்வு, பேச்சுப்போட்டியில் வென்ற மாணவிகளுக்கும் நூலகத்தை நூறு சதவிகிதம் பயன்படுத்திய குழந்தைகளுக்கு பரிசளிப்பு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட நூலக அலுவலர் ஜான்சாமுவேல் தலைமை தாங்கினார். பழ.பழனியப்பன், மதுரை அழ.சோமசுந்தரம் சிறப்புரை ஆற்றினார்கள். தொடர்ந்து திருப்பத்தூர் வாசகர் வட்டத் தலைவர் ஜெயச்சந்திரன், பேராசிரியர் பொன்கதிரேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக நூலகர் அகிலா அனைவரையும் வரவேற்றார். நூலகத்தை பயன்படுத்திய மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கபட்டது. பூலாங்குறிச்சி அரசு கல்லூரி பேராசிரியர் முருகேசன் நன்றி கூறினார்.

Related Tags :
மேலும் செய்திகள்