< Back
மாநில செய்திகள்
அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு
சிவகங்கை
மாநில செய்திகள்

அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு

தினத்தந்தி
|
11 May 2023 12:15 AM IST

பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்

சிவகங்கை

தற்போது வெளியான பிளஸ்-2 தேர்வில், சிவகங்கை மாவட்டம் மாநில அளவில் 6-வது இடத்திலும், அரசு பள்ளிகளுக்கான இடத்தில் மாநில அளவில் 5-வது இடத்தையும் பெற்றுள்ளது. இதைதெடர்ந்து, அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் மற்றும் சுயநிதி பள்ளிகளில் அறிவியல், கணினி அறிவியல், கலை மற்றும் தொழிற்பிரிவு ஆகிய பிரிவுகளில் முதல் இரண்டு இடங்களை பெற்றுள்ள 36 மாணவ, மாணவிகளை சிவகங்கை கலெக்டர் அலுவலகத்திற்கு மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி, அழைத்து அவர்களை பாராட்டினார். மேலும் சிறப்பு பரிசுகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமிநாதன், மாவட்டக்கல்வி அலுவலர்கள் மற்றும் முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் (மேல்நிலை) மற்றும் (இடைநிலை), மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்