< Back
மாநில செய்திகள்
சிவகங்கை
மாநில செய்திகள்
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
|18 Jan 2023 12:15 AM IST
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது
தேவகோட்டை,
தேவகோட்டை ஒன்றியம் சக்கந்தி ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா ஊராட்சி மன்ற தலைவர் சுமதி முத்துராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட கவுன்சிலர் நாகனி செந்தில்குமார், முன்னாள் யூனியன் தலைவர் சவுந்தரம் பிர்லா கணேசன், புலவர் காளிதாஸ் ஆகியோர் பொங்கல் விழா பற்றி பேசினர். விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாங்குடி எம்.எல்.ஏ. பரிசுகள் வழங்கினார். இதில் இருமதி துரைகருணாநிதி, காங்கிரஸ் கட்சி மாவட்ட துணை தலைவர் அப்பச்சி சபாபதி, தேவகோட்டை கிழக்கு நகர தலைவர் வக்கீல் சஞ்சய், மற்றும் முத்துராமலிங்கம், பையா கார்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.