< Back
மாநில செய்திகள்
கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
சிவகங்கை
மாநில செய்திகள்

கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

தினத்தந்தி
|
10 Jan 2023 12:15 AM IST

கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

காரைக்குடி,

சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் 2021-2022-ம் ஆண்டிற்கான லீக் போட்டியின் பரிசளிப்பு விழா காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக அரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி, கவுரவ விருந்தினராக மதுரை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்கள்.

ஏ பிரிவில் முதல் இடத்தை கோவிலூர் டி.சி.பி.எல். அணியினரும், இரண்டாம் இடத்தை காரைக்குடி லத்தீப் நினைவு கிரிக்கெட் அணியினரும், பி பிரிவில் முதல் இடத்தை தேவகோட்டை ஜூனியர்ஸ் அணியினரும், இரண்டாம் இடத்தை சச்சின் பிரதர்ஸ் அணியினரும், சி பிரிவில் முதலிடத்தை சென்சார் அணியினரும், இரண்டாம் இடத்தை காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரி அணியினரும் பெற்றனர்.

மேலும் விழாவில் தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் சிவக்குமரன், அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வி துறை முதல்வர் ராஜலட்சுமி, மானகிரி அப்போலோ மருத்துவமனை டாக்டர் திருப்பதி ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் தமிழ்நாடு பெண்களுக்கான 15 வயதுக்குட்பட்டவர்களுக்கான ரவுண்ட் ராபின் அணிக்காக தேர்வு பெற்ற பிரியதர்ஷினிக்கு நினைவு பரிசு வழங்கியும், தமிழ்நாடு வீல் சேர்ஸ் அணிக்காக தேர்வு பெற்ற ராமச்சந்திரன் மற்றும் சுரேஷ் கண்ணன் ஆகியோர் பல்கலைக்கழக துணைவேந்தரால் கவுரவிக்கப்பட்டனர். விழாவில் சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்