< Back
மாநில செய்திகள்
கன்னியாகுமரியில் ராட்சத பாறை உருண்டு விழுந்து விபத்து
மாநில செய்திகள்

கன்னியாகுமரியில் ராட்சத பாறை உருண்டு விழுந்து விபத்து

தினத்தந்தி
|
15 Oct 2023 2:57 PM IST

கன்னியாகுமரியில் கனமழையின் காரணமாக ராட்சத பாறை உருண்டு விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் அணைகளின் நீர்ப்பிடிப்பு மற்றும் மலையோர பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் தொடர் மழை காரணமாக திற்பரப்பு அருவியில் 4-வது நாளாக இன்றும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கனமழையால் கன்னியாகுமரி தோப்புவிளை பகுதியில் ராட்சத பாறை உருண்டு விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. மழையின் காரணமாக சரிவான இடத்தில் இருந்த வீட்டின் மீது அது உருண்டு விழுந்தது.

இந்த ராட்சத பாறை பெயர்ந்து விழுந்ததால் வீட்டின் ஒரு பகுதி முழுவதுமாக சேதம் அடைந்தது. எனினும் இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

மேலும் செய்திகள்