குலாம்நபி ஆசாத் காங்கிரஸை விமர்சனம் செய்வது ஏற்புடையது அல்ல - கார்த்தி சிதம்பரம், எம்.பி
|குலாம்நபி ஆசாத் காங்கிரஸை விமர்சனம் செய்வது ஏற்புடையது அல்ல என்று கார்த்தி சிதம்பரம், எம்.பி கூறினார்.
சென்னை,
காங்கிரஸ் கட்சியில் 50 வருடங்களுக்கும் மேல் இருந்த மூத்த அரசியல்வாதி குலாம் நபி ஆசாத், சமீபத்தில் அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்தையும் துறந்து கட்சியிலிருந்து விலகினார். கட்சியில் இருந்து விலகிய போதும் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து விமர்சித்து பேசி வருகிறார்.
இந்த நிலையில், குலாம்நபி ஆசாத் குறித்து கார்த்தி சிதம்பரம், எம்.பி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
குலாம்நபி ஆசாத் வெளியேறியது கட்சிக்கு பின்னடைவுதான். ஆனால் அவர் காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்வது ஏற்புடையது அல்ல. ராகுல்காந்தி கட்சியின் தலைவராக போட்டியிட விரும்பினால் எதிர்த்து வேறு யாரும் போட்டியிட மாட்டார்கள்.
நாங்கள் ஆளுங்கட்சியான திமுகவின் ஆதரவாளராகத்தான் செயல்பட முடியும், ஏனென்றால் கூட்டணி அமைத்து வெற்றி பெற்றவர்கள். சீமான் போன்றவர்கள கருத்து சுதந்திரத்திற்கு உட்பட்டு தனது மேடை பேச்சுக்களை வைத்துக்கொள்ள வேண்டும், அநாகரீகத்தை கடைபிடிக்க கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.