< Back
மாநில செய்திகள்
முதலீட்டாளர் மாநாட்டுக்கு தயாராகிறேன் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
மாநில செய்திகள்

முதலீட்டாளர் மாநாட்டுக்கு தயாராகிறேன் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தினத்தந்தி
|
29 Aug 2024 10:03 PM IST

சான்பிரான்சிஸ்கோவில் விறுவிறுப்பான நடைபயணத்துடன் இன்றைய நாள் தொடங்கி உள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று முன்தினம் இரவு அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். தமிழகத்திற்கு பல்வேறு தொழில் முதலீடுகளை ஈர்க்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் அமெரிக்காவில் அரசு முறைப் பயணமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்த பயணத்தின் போது அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ, சிகாகோவில் உள்ள பல முக்கிய நிறுவனங்களின் தொழிலதிபர்களைச் சந்திக்க உள்ளார். அப்போது முதல்-அமைச்சரின் தலைமையில் முன்னணி நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.

இந்தநிலையில் இன்று அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார். இதனிடையே உடற்பயிற்சி கூடத்தில் உடற்பியிற்சி செய்து வருவது போன்ற புகைபடத்தை வெளியிட்டு உள்ள முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சான் பிரான்சிஸ்கோவில் ஒரு விறுவிறுப்பான நடைப்பயணத்துடன் நாளை தொடங்குகிறது. இன்று மாலை முதலீட்டாளர்கள் மாநாட்டிற்குத் தயாராகிறேன். என எக்ஸ் வலை தளத்தில் பதிவிட்டு உள்ளார்.

மேலும் செய்திகள்