சிறுமியை கடித்த 2 நாய்களையும் அப்புறப்படுத்துங்கள்.. மாநகராட்சி நோட்டீஸ்
|நாய்கள் கடித்ததில் பலத்த காயமடைந்த சிறுமிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னை,
சென்னை ஆயிரம் விளக்கு மாடல் பள்ளி சாலையில் உள்ள மாநகராட்சி பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி சுதக்ஷாவை ராட்வீலர் இனத்தை சேர்ந்த இரு நாய்கள் கடித்தன. குழந்தையின் அலறல் கேட்டு வந்த தாய் சோனியாவையும் நாய்கள் கடித்துள்ளன. நாய்கள் கடித்ததில் பலத்த காயமடைந்த சிறுமிக்கு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக நாய்களின் உரிமையாளர் புகழேந்தி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், சிறுமியை கடித்த 2 நாய்களையும் வீட்டிலிருந்து 7 நாட்களுக்குள் அப்புறப்படுத்த உரிமையாளருக்கு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டிசில், "நாய்களை உரிமம் இன்றி வளர்த்ததுடன், முறையாக பராமரிக்கப்படவில்லை எனவும் 7 நாட்களுக்குள் நாய்களை அப்புறப்படுத்த தவறினால் மாநகராட்சி இந்த நாய்களை பறிமுதல் செய்யும் என்றும், நாயின் உரிமையாளர் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.