< Back
மாநில செய்திகள்
கடலூர்
மாநில செய்திகள்
புவியியல் கண்காட்சி
|9 Sept 2023 12:20 AM IST
சிதம்பரம் அரசு மகளிர் பள்ளியில் புவியியல் கண்காட்சி நடைபெற்றது.
சிதம்பரம்
சிதம்பரம் ரெயில் நிலையம் செல்லும் பகுதியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 2 நாள் புவியியல் கண்காட்சி நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியை கண்ணகி தலைமை தாங்கினார். இதில் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவிகள் காற்றாலை, எரிமலை வெடிப்பு மற்றும் குழம்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் உருவாக்கிய படைப்புகள் கட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இதை ஆசிரியர்கள், மாணவிகள் பார்வையிட்டனர். இதற்கான ஏற்பாடுகளை புவியியல் ஆசிரியை மதினாபேகம் செய்திருந்தார்.