< Back
தமிழக செய்திகள்
விஜய் மக்கள் இயக்கத்தில் மருத்துவர் அணி விரைவில் தொடக்கம் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் பேட்டி
கடலூர்
தமிழக செய்திகள்

விஜய் மக்கள் இயக்கத்தில் மருத்துவர் அணி விரைவில் தொடக்கம் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் பேட்டி

தினத்தந்தி
|
17 Sept 2023 12:15 AM IST

விஜய் மக்கள் இயக்கத்தில் மருத்துவர் அணி விரைவில் தொடங்கப்படும் என பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் கூறினாா்.

கடலூரில் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் விஜய் மக்கள் இயக்க அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் கலந்து கொண்டு எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், விஜய் மக்கள் இயக்கம் பல்வேறு அணிகளை கொண்டுள்ளது. அடுத்தகட்டமாக மருத்துவர் அணி தொடங்கி ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக டாக்டர்களுடன் ஏற்கனவே ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் தமிழகம் முழுவதும் 135 இடங்களில் தளபதி பயிலகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதில் மாலை நேரத்தில் மாணவ- மாணவிகள் ஆர்வமுடன் சென்று படித்து வருகின்றனர். நடிகர் விஜய் நீண்ட நாட்களுக்கு பிறகு தனது தந்தையை சந்தித்தது வழக்கமான ஒரு சந்திப்பு மட்டுமே என்றார். நிகழ்ச்சியில் கடலூர் கிழக்கு மாவட்ட தலைவர் சீனு, மேற்கு மாவட்ட தலைவர் ராஜசேகர், கிழக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜ்குமார், மேற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் விஜய், மாவட்ட தொண்டரணி தலைவர்கள் அருண்ராஜ், மதன், அப்பாஸ், விவசாய அணி தலைவர் பன்னீர், மாவட்ட மகளிரணி தலைவி வெண்ணிலா வெங்கடபதி, மாநகர தலைவர் சாரதி மற்றும் நகர, ஒன்றிய, தொண்டரணி, மாணவரணி உள்பட 200-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்