< Back
மாநில செய்திகள்
பொது வினியோக திட்ட சிறப்பு முகாம்கள்
அரியலூர்
மாநில செய்திகள்

பொது வினியோக திட்ட சிறப்பு முகாம்கள்

தினத்தந்தி
|
6 April 2023 1:00 AM IST

பொது வினியோக திட்ட சிறப்பு முகாம்கள் நாளை மறுநாள் நடக்கிறது.

பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் சிறப்பு பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம்கள் நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது. முகாம் நடைபெறும் இடங்கள், கிராமங்கள் விவரம் வருமாறு:-

பெரம்பலூர் மாவட்டத்தில், பெரம்பலூர் வட்டாரத்திற்கு லாடபுரம், வேப்பந்தட்டை வட்டாரத்திற்கு பூலாம்பாடி (கிழக்கு), குன்னம் வட்டாரத்திற்கு கீழப்புலியூர் (தெற்கு), ஆலத்தூர் வட்டாரத்திற்கு சிறுகன்பூர் ஆகிய 4 கிராமங்களில் முகாம் நடக்கிறது. இதேபோல் அரியலூர் மாவட்டத்தில், அரியலூர் வட்டாரத்திற்கு மேலப்பழுவூர், உடையார்பாளையம் வட்டாரத்திற்கு தர்மசமுத்திரம், செந்துறை வட்டாரத்திற்கு வஞ்சினபுரம், ஆண்டிமடம் வட்டாரத்திற்கு விளந்தை (வடக்கு) ஆகிய 4 கிராமங்களில் முகாம் நடக்கிறது.

கூட்டத்தில் பொதுமக்கள் ரேஷன் கடைகள் தொடர்பான குறைகளை தெரிவித்தும், மின்னணு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு மாற்றம் செய்தல், புதிய ரேஷன் கார்டு, நகல் மின்னணு குடும்ப அட்டை, மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் ஆகியோர்களுக்கு அங்கீகார சான்று வழங்குதல், குடும்ப தலைவர் இறந்திருந்தால் அவரது புகைப்படத்தை மாற்றம் செய்வதற்கு, புதிய குடும்ப தலைவரின் புகைப்படத்துடன் விண்ணப்பம் செய்தல் உள்ளிட்டவை மேற்கொள்ளலாம். மேலும் தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்களை அளித்து நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019-ன் படி பயன்பெறலாம், என்று அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் கற்பகம் (பெரம்பலூர்), ரமணசரஸ்வதி (அரியலூர்) ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்