< Back
மாநில செய்திகள்
பொது வினியோக திட்ட மக்கள் குறைதீர் முகாம்
கரூர்
மாநில செய்திகள்

பொது வினியோக திட்ட மக்கள் குறைதீர் முகாம்

தினத்தந்தி
|
15 Oct 2023 11:06 PM IST

பொது வினியோக திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது.

கரூர் வட்ட வழங்கல் அலுவலகத்தில் பொது வினியோக திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது. முகாமில் கரூர் வட்ட வழங்கல் அலுவலர் சண்முகம் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், பெயர் திருத்தம், புதிய குடும்ப அட்டை கோருதல், செல்போன் எண் பதிவு மற்றும் பொதுவினியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்த புகார்கள் தொடர்பான மனுக்களை அளித்தனர்.இதேபோல் புகழூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலர் பானுமதி தலைமையிலும், மண்மங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலர் சுதா தலைமையிலும் பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.

மேலும் செய்திகள்