< Back
மாநில செய்திகள்
சென்னையில் இன்று கூடுகிறது பா.ம.க பொதுக்குழு..!
மாநில செய்திகள்

சென்னையில் இன்று கூடுகிறது பா.ம.க பொதுக்குழு..!

தினத்தந்தி
|
1 Feb 2024 5:01 AM IST

நாடாளுமன்ற தேர்தலையொட்டி பா.ம.க.வின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற உள்ளது.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் விறுவிறுப்பை காண்பித்து வருகின்றன. தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்புகுழு என பல்வேறு குழுக்களை அரசியல் கட்சிகள் நியமித்து, தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளன. அந்த வகையில் தமிழ்நாட்டிலும் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலையொட்டி பா.ம.க.வின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற உள்ளது. பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டியா? அல்லது கூட்டணியா? என்பது குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது.

முன்னதாக அ.தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழு நிர்வாகிகள் பா.ம.க., தே.மு.தி.க. உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வெளியான தகவலுக்கு பாட்டாளி மக்கள் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. இன்று நடைபெறும் பா.ம.க.வின் பொதுக்குழு கூட்டத்திற்கு பின்னரே கூட்டணி தொடர்பாக முடிவு செய்யப்படும் என்று பா.ம.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்